இலங்கையின் இந்த நிலைக்கு யார் காரணம் தெரியுமா?!
SRI LANKA ISSUE JULY
ரஷ்யா, உக்ரைன் மீதான படையெடுப்பின் போது உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களுக்கு தடை ஏற்பட்டதால் இலங்கை உள்பட உலக நாடுகள் முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,
"ரஷ்யா, உக்ரைன் மீதான படையெடுப்பின் போது பல்வேறு தந்திரங்களை பயன்படுத்தினர். இதில், பொருளாதார நெருக்கடியும் ஒன்றாகும். விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறு காரணமாக பல நாடுகளில், உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இவர்கள் ரஷ்யாவின் நிகழ்ச்சி நிரலை அனுபவித்துள்ளனர்". என்று அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சியோலில் நடைபெற்ற ஆசிய தலைமைத்துவ மாநாட்டில் பங்கேற்ற அதிபர் செலென்ஸ்கி, இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து, "உணவு மற்றும் எரிபொருட்களின் விலை உயர்வு ஒரு சமூக பிளவுக்கு வழிவகுத்துள்ளது. இது எப்போது முடிவடையும் என்று தற்போது யாருக்கும் தெரியாது" என்றார் தெரிவித்தார்.