இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு.! - Seithipunal
Seithipunal


இலங்கையில் 75 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பத்தினர் எடுத்த தவறான முடிவுகளை காரணம் என எதிர்க் கட்சிகளும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டம் செய்தனர்.

தொடர்ந்து கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலக கோரி ஒரு மாதமாக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டங்களின் எதிரொலியாக பிரதமர் பதவியில் இருந்து விலக முடிவு செய்த மகிந்த ராஜபக்சே, தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே, இலங்கையில் போராட்டக்காரர்கள் மகிந்த ராஜபக்சேவின் இல்லத்திற்கு தீ வைத்தனர். இதனால் மேலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் மத்திய வங்கியின் கவர்னர் பி.நந்தலால் வீரசிங்கே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, இலங்கையில் இரண்டு நாட்களில் புதிய அரசு அமையாவிட்டால் பொருளாதாரம் சீர்குலைந்து விடும். அடுத்த இரண்டு வாரங்களில் அரசியல் கட்சிகள் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தப்பட்டால், நான் மத்திய வங்கியின் கவர்னர் பதவியில் இருந்து விலகுவேன் என்று தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில், இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுக்கொண்டார்.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவை சந்தித்து பொறுப்பை பெற்று கொண்ட ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் 26வது பிரதமராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நாளை புதிய அமைச்சரவை பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

srilanka 26th pm for ranil wickremesinghe


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->