மனைவியின் தங்கையை திருமணம் செய்ய விரும்பிய கணவன்; மனைவியை கார் ஏற்றி கொன்ற நண்பன் ..!
Husband wanted to marry his wife's sister brutally killed his wife by running her over with a car
மனைவியின் தங்கையை திருமணம் செய்து கொள்வதற்க்காக நண்பனின் உதவியுடன் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் 30 வயதுடைய அங்கித் குமார் என்பவர் கிரண் என்ற பெண்ணை 05 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு தற்போது வரை குழந்தைகள் இல்லை. இதனால் மனைவியின் சகோதரியை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 08 ஆம் தேதி அங்கித் தனது மனைவியை தனது மாமியார் வீட்டிலிருந்து தனது வீட்டிற்கு பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அப்போது பைக்கில் பெட்ரோல் போடும் நேரத்தில் சாலையோரம் இருந்த கிரண் மீது கார் மோதியத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
மனைவி உயிருடன் இருந்தால் அவரது தங்கையை திருமணம் செய்துகொள்ள முடியாது என நினைத்து மனைவியை தீர்த்துக்க முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விபத்து நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.இதில் காரின் உரிமையாளர் அங்கித்தின் நண்பர் சச்சின் என கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். அத்துடன், விபத்தில் பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தினர்.இதன் போது அங்கித் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
அதாவது, தனக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. ஆனால் குழந்தைகள் இல்லை எனவும், ஆகவே தனது மனைவியின் தங்கையை திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும், இதற்கு மனைவியின் தங்கை மறுப்பு தெரிவித்ததால் மனைவியை நண்பனின் உதவியுடன் கார் ஏற்றி கொன்றதற்காக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்த மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Husband wanted to marry his wife's sister brutally killed his wife by running her over with a car