தஞ்சை மாவட்டத்தில்.. ஒரே நாளில் பிரச்சாரம் செய்யும் எடப்பாடி மற்றும் ஸ்டாலின்..! அண்ணாமலையும் அதே பகுதியில் பிரச்சாரம்.! - Seithipunal
Seithipunal


வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதற்காக தமிழகத்தின் பல்வேறு கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி நாளை 15ஆம் தேதி திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தஞ்சை மாவட்டத்தில் ஸ்டாலின் காணொளி பிரச்சாரம் செய்ய இருக்கிறார். இதை பொதுமக்கள் அனைவரின் பார்வையில் படும்படி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெரிய திரை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

தஞ்சை மாநகராட்சி பகுதியில் 52 திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோல நகரின் மற்ற பேரூராட்சி பகுதிகளிலும் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை தஞ்சை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். 

அத்துடன் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தஞ்சை மாநகராட்சியில் போட்டியிடுகின்ற பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக நாளை தஞ்சை மானம்புசாவடியில் உரையாற்றவுள்ளார். தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் அதிமுக பாஜக மற்றும் திமுக ஆகிய கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட இருப்பதால் அப்பகுதியில் தேர்தல் காற்று அனல் பறக்க வீசுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin eps at same time campaign in Tanjavur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->