மெகபூபா முப்தியின் சகோதரிக்கு சம்மன்.! தோண்டப்படும் யாசின் மாலிக்கின் பழைய வழக்கு.!
Summons to Mehbooba Muftis sister Old case of Yasin Malik to be dug up
காஷ்மீரின் முன்னாள் முதல்வர் முப்தி முகமது சயீத்தின் மகளும், மெகபூபா முப்தியின் சகோதரியுமான ருபையா சயீத் 1989 ஆம் ஆண்டு பயங்கர வாதிகளால் கடத்தப்பட்டார். இது சம்மந்தமாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேரில் ஆஜராக ருபையா சயீத்க்கு சம்மன் அனுப்பியுள்ளது.
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுதல், சதித் திட்டம் தீட்டுதல், பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருத்தல், பயங்கரவாத நடவடிக்கைகள், குற்ற சதி, தேச துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட, ஜம்மு-காஷ்மீா் பிரிவினைவாத தலைவா் முகமது யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், யாசின் மாலிக் மீதான பழைய வழக்குகளை தூண்டி எடுத்து விசாரணை செய்ய சிபிஐ முடிவு செய்துள்ளது.
அதன்படி, 1989 ஆம் ஆண்டு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் முப்தி முகமது சயீத்தின் மகளும் மெகபூபா முப்தியின் சகோதரியுமான ருபையா சயீத், யாசின் மாலிக்கால் கடத்தப்பட்டதாகக் கருதப்படும் வழக்கை தற்போது சிபிஐ கையில் எடுத்துள்ளது.
இதுகுறித்து முதல் முறையாக நேரில் ஆஜராக வேண்டும் என்று ருபையா சயீத்க்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
1989 ஆம் ஆண்டு இந்த கடத்ததலில், 5 தீவிரவாதிகளை விடுவிக்கக் வேண்டும் என்று பயங்கரவாதிகள் கோரிக்கை வைத்தனர். அதன்படியே 5 தீவிரவாதிகளை விடுதலை செய்து ருபையா சயீத் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Summons to Mehbooba Muftis sister Old case of Yasin Malik to be dug up