சிவி சண்முகத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!  - Seithipunal
Seithipunal


சிவி சண்முகம் ஏன் மன்னிப்பு கேட்க கூடாது என்று, உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

தமிழக அரசு குறித்து அவதூறாக பேசிய வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஏன் மன்னிப்பு கேட்க கூடாது என்று, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இவ்வளவு மோசமான ஒரு பேச்சுக்காக சிவி சண்முகம் ஏன் மன்னிப்பு கேட்கக் கூடாது, தமிழக அரசு எதிராக சிவி சண்முகம் பேசிய வார்த்தைகள் மோசமானது, நீங்கள் செய்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம் செய்துளீர்கள் என்று, சிவி சண்முகம் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

மேலும், மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு எப்படி இவ்வளவு கொச்சையாக பேச முடிகிறது என்றும் சி.வி சண்முகம் தரப்பு வழக்கறிஞருக்கு உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டனத்தை தெரிவித்தது.

மேலும் சீவி சண்முகம் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும், உங்கள் தவறை உணராவிடில் விசாரணையை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அப்போது குறுக்கிட்ட தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், எதிர்காலத்தில் இதுபோன்று பேசமாட்டேன் என்று எழுதித் தர வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

இதற்க்கு உரிய பதில்களை பெற்று தருவதாக சி.வி சண்முகம் தரப்பு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court Condemn to ADMK CV Shanmugam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->