நாட்டில் என்ன நடக்கிறது? ஜனாதிபதிக்கு உச்ச நீதிமன்றம் காலகேடு நிர்ணயிக்க முடியுமா?- ஜகதீப் தன்கர்
Supreme Court set term limit President Jagdeep Dhankar
தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில், மசோதாக்களுக்கு அனுமதியளிக்காமல் கவர்னர்செய்த செயலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் "ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்.

ஜனாதிபதி மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்காதபட்சத்தில் அதை எதிர்த்து மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்" எனத் தெரிவித்திருந்தார்.
இதில் முதன்முறையாக உச்சநீதிமன்றம், குடியரசு தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்தது உத்தரவிட்டது. இதனால் பல தரப்பிலிருந்து,'ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?' என்ற கேள்வி நிலவியது.
ஜக்தீப் தன்கர்:
இந்நிலையில் துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர் இதுகுறித்து தெரிவித்ததாவது,"உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல் செயல்படுகிறது. நாம் எங்கு செல்கிறோம்?. நாட்டில் என்ன நடக்கிறது?. ஜனநாயகத்திற்காக நாங்கள் ஒருபோதும் பேரம் பேசவில்லை.
குடியரசு தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியுமா? குடியரசுத் தலைவர் நீதிமன்றம் வழி நடத்தும் சூழ்நிலையை அனுமதிக்க முடியாது. பிரிவு 142 ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையை போல் ஆகியுள்ளது.
இது நீதித்துறைக்கு 24x7 ஆக கிடைக்கிறது.அரசமைப்பின் 145ஆவது பிரிவை (முழுமையான நீதியை உறுதி செய்யும் உத்தரவை பிறப்பிக்கும் அதிகாரம்) விளக்குவது தான் நீதிபதிகளுக்கு இருக்கும் ஒரே உரிமை.
அரசமைப்பின் அதிகாரத்தை மறந்து குடியரசுத் தலைவருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.இது தற்போது அரசியல் ஆர்வலர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
Supreme Court set term limit President Jagdeep Dhankar