சனாதனம் குறித்து சர்ச்சை பேச்சு! உதயநிதி மீது 4 பிரிவுகளில் பரபரப்பு புகார்!
Supremecourt lawyer files complaint against Udhayanidhi
சென்னை தேனாம்பேட்டையில் நேற்று நடைபெற்ற சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அந்த மாநாட்டு மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் "இந்த மாநாட்டிற்கு சனாதான எதிர்ப்பு மாநாடு என பெயரிடாமல், சனாதன ஒழிப்பு மாநாடு என பெயர் வைத்ததற்கு இதன் ஒருங்கிணைப்பாளரை பாராட்டுகிறேன்.
சிலவிஷயங்களை எதிர்க்க முடியாது, ஒழிக்க தான் வேண்டும். கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிக்க தான் வேண்டும், எதிர்க்க முடியாது. அதேபோல் தான் சனாதனமும். அதை எதிர்க்க கூடாது, அதனை ஒழிக்க வேண்டும். சனாதானம் சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிரானது" என பேசி இருந்தார்.
அரசியல் சாசனத்தின் படி அமைச்சராக பதவி ஏற்று கொண்ட ஒருவர் குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக வெறுப்புணர்வு தூண்டும் வகையில் பேசியுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சனாதான தர்மத்தை ஒழிக்க வேண்டும் என கூறியதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு சர்ச்சையான நிலையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் டெல்லி காவல் நிலையத்தில் புகார் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தமிழக அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்திற்கு எதிராக இழிவான கருத்துகளை தெரிவித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரில் இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 120B, 153A, 295, 594 உன்கிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. தமிழக முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலினின் அறிக்கையை பார்த்தோம். கேபினட் அமைச்சராகவும் இருக்கிறார்.முதலில் அவர் அரசியல் சாசனப் பதவியில் இருக்கிறார். அவர் முட்டாள்தனமாக அல்லது இதுபோன்ற விஷயங்களைப் பேசக்கூடாது என சில்கூர் பாலாஜி கோவில் தலைமை அர்ச்சகர் ரங்கராஜன் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Supremecourt lawyer files complaint against Udhayanidhi