செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் திடீர் திருப்பம்! அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையை நாளை (ஆகஸ்ட் 06) மாலை 3 மணிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கும், பின்னணியும்:

சட்டவிராத பண பரிமாற்ற வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் மறுத்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரியும், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரியும்செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் அமலாக்கதுறையின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்து வருகின்றது.

இந்த நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் மேலும் அமலாக்கத்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.

இதற்கு உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. வாதாடுவதற்கு தயாராக இல்லை என்று கோரி, இந்த வழக்கு விசாரணை தள்ளி வைக்க கோருவதை, என்ன மாதிரியான செயல் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டமாக தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கை வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள விடாமல் தடுக்கும் வகையில் அமலாக்கத்துறை  அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

மேலும், ஏழு முறை இந்த வழக்கை எந்த காரணமும் இன்றி அமலாக்கத்துறை ஒத்திவைக்க கோரிக்கை வைத்துள்ளதாகவும் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் வாதம் வைத்தார்.

இதனையடுத்து, செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையை நாளை (ஆகஸ்ட் 06) மாலை 3 மணிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SupremeCourt SenthilBalaji Bail case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->