டிஜிட்டல் முறையில் தேர்தல் பிரச்சாரம்., பேரணி பரப்புரைக்களுக்கு தடை., தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள்.!
Sushil Chandra Election Commission Election 2022
உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்து உள்ளார். அவரின் அந்த அறிவிப்பில்,
"நோய் தொற்று பரவாத வகையில் இந்த தேர்தல் நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்துவது தான் தேர்தல் ஆணையத்தின் முதல் நோக்கமாகும். கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் உடன் இந்த தேர்தல் நடத்தப்பட உள்ளது.
5 மாநில சட்டப்பேரவை களில் மொத்தம் 690 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மொத்தமாக 18.34 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இதில், 8.55 கோடி பெண் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 29.9 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
80 வயது முதியவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலிருந்தபடியே தபால் வாக்கு மூலம் வாக்களிக்கலாம். கொரோனா பரவல் காரணமாக கடந்த தேர்தலை விட 16 சதவீதம் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. கூடுதல் வாக்குச்சாவடிகள் இந்த அமைக்கப்பட்டு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் கட்டுப்பாடுகள் :
தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. தேர்தலுக்கான பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அரசியல் காட்சிகள் நடைபயணம், சைக்கிள் பேரணி ஆகியவற்றிற்கு ஜனவரி 15ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க ஐந்து நபர்கள் வரை மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. டிஜிட்டல் முறையில் உங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் பரப்புரையும் டிஜிட்டல் முறையில் செய்ய வேண்டும்.
வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் செயலி மூலம் தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
தேர்தல் தேதி :
மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.
உத்தராகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.
மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.
முதல் கட்ட தேர்தல் : உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, பஞ்சாப் - பிப்ரவரி 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இரண்டாம் கட்ட தேர்தல் : பிப்ரவரி 14 ஆம் தேதி - உத்தர பிரதேசம்,
மூன்றாம் கட்ட தேர்தல் : பிப்ரவரி 20ஆம் தேதி - உத்தர பிரதேசம்,
நான்காம் கட்ட தேர்தல் : பிப்ரவரி 23ஆம் தேதி - உத்தர பிரதேசம்,
ஐந்தாம் கட்ட தேர்தல் : பிப்ரவரி 27ஆம் தேதி - உத்தர பிரதேசம், மணிப்பூர்
ஆறாம் கட்ட தேர்தல் : மார்ச் 3 ஆம் தேதி - உத்தர பிரதேசம்,
ஏழாம் கட்ட தேர்தல் : மார்ச் 7 ஆம் தேதி - உத்தர பிரதேசம், மணிப்பூர்
5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி நடைபெறும்.
குறிப்பு : பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியும், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியின் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
கோவா மாநிலத்தில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளுக்கும், உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், மணிப்பூர் மாநிலத்தில் 60 தொகுதிகளுக்கும், உத்தரபிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
English Summary
Sushil Chandra Election Commission Election 2022