#BigBreaking || 5 மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.!
SushilChandra ElectionCommission Election2022
உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியும், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியின் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
கோவா மாநிலத்தில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளுக்கும், உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், மணிப்பூர் மாநிலத்தில் 60 தொகுதிகளுக்கும், உத்தரபிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், பஞ்சாப், கோவா உட்பட 5 மாநில தேர்தல் தேதிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்து வருகிறார். அவரின் அந்த அறிவிப்பில்,
"நோய் தொற்று பரவாத வகையில் இந்த தேர்தல் நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்துவது தான் தேர்தல் ஆணையத்தின் முதல் நோக்கமாகும். கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் உடன் இந்த தேர்தல் நடத்தப்பட உள்ளது.
5 மாநில சட்டப்பேரவை களில் மொத்தம் 690 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மொத்தமாக 18.34 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இதில், 8.55 கோடி பெண் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 29.9 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
80 வயது முதியவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலிருந்தபடியே தபால் வாக்கு மூலம் வாக்களிக்கலாம். கொரோனா பரவல் காரணமாக கடந்த தேர்தலை விட 16 சதவீதம் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. கூடுதல் வாக்குச்சாவடிகள் இந்த அமைக்கப்பட்டு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. " என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் தேதி இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்க உள்ளார்.
English Summary
SushilChandra ElectionCommission Election2022