சுவிஸ் பேங்கில் முதலீடு : அனில் அம்பானிக்கு ஐடி நோட்டீஸ்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பிரபல தொழில் அதிபர்களில் ஒருவரான அனில் அம்பானி, சுவிஸ் வங்கிகளில் ரகசிய கணக்கு வைத்திருப்பதற்காக வருமான வரித்துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

உலகின் பெரும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் தங்களின் சொத்துக்களுக்கு வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்கவும், கருப்பு பணத்தை மறைக்கவும் சுவிஸ் வங்கிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய தொழிலதிபர் அனில் அம்பானி ஸ்விஸ் வங்கிகளில் ரூ.814 கோடி அளவுக்கு முதலீடு செய்து, ரூ.420 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பதாக புகார் எழுந்தது.

மேலும், அணில் அம்பானி தெரிந்தே சுவிஸ் வங்கி முதலீடுகளை மறைத்து வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியது.

இதுகுறித்து, அணில் அம்பானி மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ள வருமான வரித்துறை, விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

swiss banks income tax notice anil ambani


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->