இயக்குனர் டி ராஜேந்தர் கார் விபத்து., ஒருவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


நடிகர் டி ராஜேந்தர் குடும்பத்தினருடன் சென்ற கார் விபத்து ஏற்படுத்தியதில், பாதசாரி உயிரிழந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

நடிகரும், இயக்குனருமான டி ராஜேந்தர் தனது மகன் நடிகர் சிலம்பரசன், குடும்பத்துடன் தியாகராய நகர் பகுதியில் வசித்து வருகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று இவர் குடும்பத்தினருடன் (சிம்பு இல்லாமல்) மற்ற குடும்ப உறுப்பினர்களுடன், பேரனுக்கு உடல்நிலை சரியில்லை என்பதற்காக மருத்துவரை பார்க்க தனது காரில் சென்றுள்ளார்.

அப்போது தேனாம்பேட்டை இளங்கோ தெரு பகுதியில் சாலையை கடக்க முயன்ற ஒரு நபர் மீது நடிகர் இயக்குனர் டி ராஜேந்திரனின் கார் மோதி விபத்து ஆனது.

காரை அவரின் ஓட்டுனர் ஓட்டியுள்ளார். டி ராஜேந்தர் உடனடியாக இறங்கி அவசர சிகிச்சை ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து, காயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 50 வயதான முனுசாமி என்ற அந்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.

முனுசாமியின் கால் அடிபட்டதால், அவர் சாலையைக் கடக்க தவழ்ந்து கொண்டே சாலையை கடந்தபோது, டி ராஜேந்திரன் கார் அவர் மீது மோதியுள்ளது. 

இதுகுறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இயக்குனர் டி ராஜேந்திரரின் ஓட்டுனர் செல்வத்தை கைது செய்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

T RAJENDER CAR AACIDENT


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->