தலிபான் பயங்கரவாதிகள் டமால், டுமீல்., பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 4 பேர் பலி.!
talibon attack to pakistan army
பாகிஸ்தான் நாட்டில் உள்ள தலிபான் இயக்கமான தெஹ்ரீக்-இ-தலிபான் இயக்கத்திற்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே சண்டை நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது.
இதன் காரணமாக வன்முறை சம்பவங்கள், வெடிகுண்டு சம்பவங்கள். உயிரிழப்புகள் இன்றி சிறிது காலம் பாகிஸ்தானில் அமைதி திரும்பத் தொடங்கியது.
இந்த நிலையில், உடன்படிக்கை விதிமுறைகளை பாகிஸ்தான் அரசாங்கம் மீறிவிட்டதாக கூறிய தலிபான் இயக்கம், சட்டை ஒப்பந்த உடன்படிக்கையை திரும்ப பெற்றது. மேலும், பாகிஸ்தான் இராணுவத்தின் மீது தாக்குதலையும் தொடங்கியது.
நேற்று, பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் மாகாணம், மீர் அலி நகரில் தலிபான்கள் பதுங்கியிருப்பதாக பாகிஸ்தான் இராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைக்கவே, அங்கு தேடுதல் வேட்டையில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.
அந்நேரம், தலிபான்கள் தாக்குதல் நடத்தவே, இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டையில் 4 பாகிஸ்தான் பாதுகாப்பு படை இராணுவத்தினர் உயிரிழந்தனர். அதே சமயத்தில், ஒரேயொரு பதளிப்பான் பயங்கரவாதியை கைது செய்த பாகிஸ்தான் இராணுவம், அவனிடம் இருந்து ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளது.
முன்னதாக ஆப்கானிஸ்தான் நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளான தலிபான்கள் பயங்கரவாதிகள் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தாலிபான்களின் இந்த ஆட்சியில் பெண்களுக்கு எந்த உரிமையும் வழங்கப்படாமல், அடிமைகளாக நடத்தப்படுவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
English Summary
talibon attack to pakistan army