#தீ_பரவட்டும்.."பினராயி விஜயனுக்கு மு.க ஸ்டாலின் நன்றி..!! - Seithipunal
Seithipunal


சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலநிர்ணயம் வேண்டும் என ஒவ்வொரு மாநில சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த 11ம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்த கருத்தை ஏற்றுக்கொண்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா முழுவதும் தீ பரவட்டும் எனவும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் கோரிக்கையை ஏற்று டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற போவதாகவும் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆளுநருக்கு எதிரான தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் தெரிவித்ததோடு நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆளுநரின் செயல்பாட்டுக்கு கூட்டு நடவடிக்கை அவசியம் என்றும் அரசின் செயல்பாட்டை முடக்கும் வகையில் கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு ஆளுநர்கள் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றனர். ஆளுநருக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற பரிசீலிக்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.

இதற்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில் "ஆளுநர் விவகாரம் குறித்த கடிதத்திற்கு ஆதரவு தெரிவித்து உடனடியாக பதில் அளித்ததற்கு நன்றி. மாநில சுயாட்சியை பறிக்கும் செயலுக்கு எதிரான நடவடிக்கையில் தமிழ்நாடும், கேரளாவும் அரணாக இருந்து வருகின்றன. ஆளுநரின் வரம்புமீறலுக்கு எதிரான போரிலும் நாம் வெல்வோம். #தீ_பரவட்டும்" என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu CM MKStalin thanked Kerala CM Pinarayi Vijayan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->