'தமிழ்நாடு' என பெயர் சூட்டப்பட்ட நாள் இன்று.. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு.!!
tamil nadu day 2022
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தென்னிந்திய பகுதி மெட்ராஸ் மாகாணம் என அழைக்கப்பட்டது. இந்திய நாட்டின் விடுதலைக்கு பிறகு 1950 ஆம் ஆண்டு இந்தியா குடியரசு நாடானது. அதையடுத்து, 1956 ஆம் ஆண்டு வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டனர். அதன்படி கர்நாடகா, கேரளா, ஆந்திர மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மொழி பேசும் மக்கள் இருந்த பகுதி மெட்ராஸ் மாகாணமாக தொடர்ந்தது. இது தமிழ் பேசும் மக்களின் நெஞ்சை வாட்டியது.
அப்போதிலிருந்து பெயர் மாற்ற வேண்டும் என குரல்கள் எழுப்பப்பட்டது. குறிப்பாக விருதுநகரில் தியாகி சங்கரலிங்கனார் தமிழ்நாடு என பெயர் மாற்ற கோரி 1950 ஆம் ஆண்டு சாகும் வரை உண்ணா நோன்பை கடைபிடித்தார். அப்போது அவரை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்தனர். அப்போது அண்ணாதுரை தியாகி சங்கரலிங்கனாரை சந்தித்தார். அந்த கோரிக்கைக்காக சங்கரலிங்கனார் உயிர் நீத்தார். பின்னர் பலமுறை தமிழ்நாடு பெயர் மாற்றம் கோரி குரல்கள் எழுப்பப்பட்டது.
இறுதி 1967ஆம் ஆண்டு அண்ணாதுரை முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதும், தமிழ்நாடு பெயர் மாற்றம் குறித்து அரசியல் சட்ட திருத்த தீர்மானத்தை சட்டமன்றத்தில் ஜூலை 18, 1967 ஆம் ஆண்டு கொண்டு வந்தார். அண்ணாதுரை கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு ஏகமனதாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். தீர்மானம் நிறுவப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு 1969 ஜனவரி தமிழ்நாடு என பெயர் முறைப்படி மாற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் இன்று.
இந்நிலையில், மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு பெயர் சூட்டப்பட்ட இந்நாளை தமிழக அரசு, தமிழ்நாடு நாள் விழா இன்று கொண்டாடுகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு நாள் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பல்வேறு துறை ஆளுமைகளுக்கு விருதுகளும் வழங்கப்பட உள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் முதலமைச்சரும் மு க ஸ்டாலின் பங்கேற்று விருதுகளை வழங்க உள்ளார்.