தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு முடிவு வேண்டும் - மத்திய அரசிற்கு ஜி.கே வாசன் வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது மீண்டும் நீடிக்கிறது
கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசு குறிப்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கைது செய்யப்பட்ட தமிழக
மீனவர்களை மீட்க, இனியும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது
செய்யப்படாமல் இருக்க அவசரக் கூட்டம் நடத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நாகை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்
கொண்டிருந்தனர். அவர்களில் 12 பேரை இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு அருகே கைது
செய்து, அவர்களின் ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்து சென்றனர். இதனால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் தொடர்கிறது. இது
தொடரக்கூடாது. எனவே மத்திய அரசு குறிப்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 12 தமிழக மீனவர்களையும், விசைப்படகையும் மீட்கவும், இனிமேலும் இது போன்ற கைது நடவடிக்கை தொடரக்கூடாது என்பதற்காகவும் அவசரக் கூட்டம் நடத்தி, மீனவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி, நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மேலும் மத்திய அரசு இலங்கை அரசிடம் கண்டிப்போடு பேசி தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு ஒரு நல்ல முடிவு ஏற்படுத்த வேண்டும்.

மத்திய மாநில அரசுகள் மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு உரிய பாதுகாப்பை
மீனவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில்
வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil nadu fishermen need an end to the problem gk vasan urges the central government


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->