ஆட்சிக்கு வந்ததும் தமிழ்த்தாய் பாட்டு தூக்கப்படும் - சீமான் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், திராவிடம் என்ற சொல்லை எடுத்ததற்கு இவ்வளவு கொதிக்கின்றனர் என்றும்,   50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் மொழியை உயிரற்ற நிலையில் வைத்திருப்பதற்கு ஒருவருக்கும் கோபம் வரவில்லை என்று  கூறியுள்ளார்.


மேலும், நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வந்தால் தமிழ்த்தாய் பாட்டு தூக்கப்படும் என்று தெரிவித்த அவர், அதற்கு இந்த திராவிடர்கள் என்ன செய்வார்கள் என்றும், திராவிடத்தை வேண்டுமென நுழைத்து விட்டு மூன்று சதவீதம் உள்ள பிராமணர்களைக் காட்டி 30 சதவீத திராவிடர்கள் உள்ளே வந்துவிட்டார்கள் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மாநில தன்னாட்சி பேசி வந்த நிலையில் கல்வி, மொழி, வரி, மருத்துவம் போன்ற அனைத்து உரிமைகளையும் மத்திய அரசிடம் பறிகொடுத்துவிட்டு தற்போது மாநில உரிமைகளை பற்றி பேசுவது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பிய சீமான்,  கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட நாகரிகம் தமிழர் நாகரிகம் என்று தான் சொல்லப்படுகிறது. ஆனால், ஆட்சியில் உள்ளவர்கள் திராவிட நாகரிகம் என்று சொல்கிறார்கள் என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil thai song will be lifted after coming to power seaman sensational interview


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->