தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்.. வருத்தம் தெரிவித்தது ஆர்.பி.ஐ.! - Seithipunal
Seithipunal


சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நேற்று குடியரசு தின விழா நடைபெற்றது. அப்போது தமிழ் தாய் வாழ்த்து ஒலித்த போது ஒரு சில ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்க வில்லை. இதையடுத்து, தமிழ் தாய் வாழ்த்து பாடும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என தமிழக அரசு சமீபத்தில் சட்டம் ஏற்றி உள்ளது என ஒருவர் தெரிவித்ததையும் ,பொருட்படுத்தாமல் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சென்றனர். 

இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் செயலுக்கு பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளது. மேலும், அவர்கள் மீது உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷ், ஆன்லைன் மூலம் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், குடியரசு தின விழாவில் தமிழ்தாய் வாழ்த்து பாடலை அவமதித்த விவகாரம் தொடர்பாக ரிசர்வ் வங்கி வருத்தம் தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் எஸ்.எம்.என்.சாமி, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamil thai valthu issue RBI regrets


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->