இலவச பனங்காய்களை சுமக்கும் தெலுங்கு வாரிசுகள்! கருணாநிதி குடும்பத்தை சீண்டும் தமிழிசை! - Seithipunal
Seithipunal


கருணாநிதி குடும்பத்தின் பத்திரிக்கையும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி பத்திரிக்கையில் "ஆளுநர்களே எரிமலையோடு விளையாடாதீர்கள்" என்ற தலைப்பில் முரசொலி கட்டுரை வெளியிட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் காட்டமான பதிலை அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார். 

அந்த கண்டன அறிக்கையில் "தெலுங்கை பூர்வீகமாகக் கொண்டு வீட்டில் தெலுங்கு பேசி தமிழ் வேஷமிடும் தெலுங்கர்கள்" என கருணாநிதி குடும்பத்தை மறைமுகமாக தமிழிசை சௌந்தர்ராஜன் சாடியுள்ளார். தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்கும் பொழுது ஆந்திராவைச் சேர்ந்த என்-நியூஸ் செய்தி தொலைக்காட்சி தெலுங்கை பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் தமிழகத்தின் முதல்வராக இன்று பதவியேற்று உள்ளார் என செய்தி வெளியிட்டது. 

இந்த சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. ஸ்டாலின் தமிழரா? அல்லது தெலுங்கரா? என பலதரப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் இது குறித்து ஸ்டாலின் குடும்பத்தின் தரப்பிலோ திமுகவின் தரப்பிலோ எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் தமிழிசை சௌந்தரராஜனின் அறிக்கையால் மீண்டும் கருணாநிதி குடும்பத்தை பற்றிய விவாதம் கிளப்பியுள்ளது. 

அதேபோன்று தமிழிசை சௌந்தர்ராஜன் தனது அறிக்கையில் "இலவச பனங்காய்களை தலையில் சூட்டிக் கொள்ளும் வாரிசு குருவிகள் அல்ல நாங்கள். பனை விதைகளாய் மண்ணில் புதைந்து தானே வளர்ந்து உருகேறிய பனை மரங்கள் நாங்கள்" என குறிப்பிட்டுள்ளார். பல வருடங்களுக்கு முன்பு தமிழ் சமூகமான நாடார்கள் பெரும்பாலானோர் பனைத் தொழிலை அடிப்படையாகக் கொண்டே வாழ்ந்தனர். இதன் காரணமாக நாடார் சமுதாயத்தின் அடையாளமாக பனைமரம் பார்க்கப்படுகிறது. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் நாடார் சமூகத்தை சார்ந்தவர். 

தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்டாலினின் தங்கையுமான கனிமொழி எம்.பி நாடார் சமுதாயத்தை சார்ந்தவர் என பரவலாக பேசப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் பொழுது தனது சமூக வலைத்தள பக்கங்களில் பனைமரம் புகைப்படத்தினை உபயோகித்து இருந்தார். இதன் காரணமாக நாடார் சமுதாயத்தின் அடையாளமான பனைமரத்தை தேர்தலுக்காக கனிமொழி பயன்படுத்துகிறார் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பனைமர புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கினார். 

இந்த நிலையில் தமிழிசை சௌந்தரராஜனின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள "இலவச பனங்காய்களை தலையில் சூட்டிக் கொள்ளும் வாரிசு குருவிகள்" என்ற வாக்கியம் நாடார் சமுதாயத்தில் பிறந்த கனிமொழியை இசை வேளாளர் சமுதாயத்தின் கருணாநிதி குடும்பத்தில் வாரிசாக உள்ளதை சுட்டிக்காட்டுவது போல் அமைந்துள்ளது.

 அதேபோன்று "பனை விதைகளாய் மண்ணில் புதைந்து தானாக வளர்ந்து உருகேறிய பனை மரங்கள் நாங்கள்" என்ற வாக்கியம் தமிழிசை சௌந்தர்ராஜன் தன்னை நாடார் சமுதாயத்தைச் சார்ந்த குடும்பத்தின் வாரிசாக இருப்பதை மறைமுகமாக குறிப்பிடுகிறார் என்றே தோன்றுகிறது. பனம்பழத்தை வைத்து உதாரணம் சொன்ன முரசொலிக்கு அதே பனம்பழத்தை வைத்து தமிழிசை சௌந்தர்ராஜன் பதிலடி தந்துள்ளார் என்றே கருத வேண்டும். 

தமிழிசை சௌந்தர்ராஜனின் இத்தகைய விமர்சனங்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகமும் ஸ்டாலின் குடும்பமும் பதிலடி கொடுப்பார்களா? அல்லது ஸ்டாலினின் பூர்வீகம் தெலுங்கு என விமர்சனம் செய்த போது மௌனம் காத்தது போல் இதற்கும் மௌனம் காப்பார்களா? என இணையதள வாசிகள் கேள்வி எழுப்புகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilisai indirectly attacked the Karunanidhi family


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->