"காவி" தியாகத்தின் வண்ணம்.!! - பாஜக வேட்பாளர் தமிழிசை கருத்து.!! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தூர்தர்ஷன் நிறுவனத்தின் லோகோக்கள் காவி நிறத்தில் மாற்றப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாடு முழுவதும் காவிமயமாக்குவதை பாஜக முன்னெடுக்கிறது. அதன் தொடக்கமாக  தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் லோகோ காவி நிறத்தில் மாற்றப்பட்டுள்ளது என விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில் முன்னாள் ஆளுநரும் தென் சென்னை பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் "காவி என்பது தியாகத்தின் வண்ணம். தேசிய கொடியின் முதன்மை வாய்ந்த வண்ணம் காவி தான். காவி வண்ணத்தில் தொலைக்காட்சியின் இலச்சினையை மாற்றுவது தவறில்லை. 

டிடி பொதிகை என்ற பெயரை டிடி தமிழ் என மாற்றம் செய்து தமிழுக்கு தானே பெருமை சேர்த்துள்ளனர்" என கருத்து தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilisai opined that saffron is color of sacrifice


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->