#BREAKING : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்.. நாளை மறுநாள் அமைச்சரவை கூட்டம்.! - Seithipunal
Seithipunal


பொங்கலுக்கு பிறகு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்தின் முதல் வாரத்தில் கவர்னர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும். ஆனால், இந்த முறை தற்போது பெய்த மழை பாதிப்பு காரணமாக நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதால் 2023ஆம் ஆண்டுக்கான சட்டசபை கூட்டத்தொடரை பொங்கலுக்கு பின்பு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு முன்பாக அமைச்சரவை கூட்டத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 

அதன்படி சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை மறுநாள் மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர். அதேபோல் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழக அரசின் ஒராண்டுக்கான செயல்திட்டம், இந்தி திணிப்பிற்கு, ஆன்லைன் ரம்மி தடை குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Cabinet meeting on December 20


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->