அமைச்சராகும் உதயநிதி.? முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்.! - Seithipunal
Seithipunal


சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்று தமிழகத்தின் நலன்சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கிறார்கள். 

குறிப்பாக, சென்னையை அடுத்த பரந்தூரில் அமைய உள்ள 2-வது பசுமை விமான நிலைய விவகாரம் முக்கியமான இடத்தை பிடிக்கும் என கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி தடை, குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதே சமயத்தில், உதயநிதியை அமைச்சராக்குவது குறித்தும் விவாதித்து முடிவு எடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu cabinet meeting today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->