குழப்பத்தில் மக்கள்! தீயசக்தி திமுகவிடம் சிக்கிய தமிழ்நாடு.. அடுத்தடுத்த டிவிட், பரபரப்பில் அரசியல் களம்!
Tamilnadu Day nov 1 DMK ADMK MK Stalin EPS
திமுக முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள், நவம்பர் 1!
தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காகப் போராடிய அனைவரையும் எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளில் போற்றி வணங்குகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தெக்கணத்திற் சிறந்த திராவிட நல்திருநாடாம் நமக்கான நற்றமிழ்நாடு கிடைத்த நாளான இந்நாளை "தமிழ்நாடு நாள்" என்று எனது தலைமையிலான அம்மாவின் அரசு அறிவித்ததை பெருமிதத்துடன் நினைவுகூர்ந்து, அனைவருக்கும் இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன்,
தீயசக்தியின் விடியா ஆட்சியில் சிக்கியுள்ள நம் தமிழ்நாட்டை விரைவில் மீட்டு, பாரதியின் கூற்றைப்போல் "வான்புகழ் கொண்ட" தமிழ்நாடாக மீண்டும் மிளிரச் செய்திட உறுதியேற்போம். தமிழ்நாடு நாள் நவம்பர் 1"என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு 1956 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தை மொழிவாரியாக பிரித்த நாள் இன்று (01.11.1956), கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் இன்று அதனதன் பிறந்த நாளை கொண்டாடுகின்றன.
ஆனால், 'தமிழ்நாடு தினம்' எந்த நாள் என்பதில் இதுவரை ஆட்சி செய்த திமுக, அதிமுகவின் அரசியல் காரணமாக (அதிமுக ஆட்சிக்காலத்தில் நவ.1 ஆம் தேதி தமிழ்நாடு தினம், திமுக ஆட்சியில் பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18 தான் தமிழ்நாடு நாள் என அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது) தமிழருக்கென ஒரு மாநிலம் என உருவான நாளை கொண்டாடுவதில் பாவப்பட்ட மக்கள் தான் பரிதவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு பிறந்தநாள் என எந்த நாளை கொண்டாடுவது? இனியாவது முடிவுக்கு வருமா?
English Summary
Tamilnadu Day nov 1 DMK ADMK MK Stalin EPS