இறுதியாக தமிழகத்தில் விடியல் ஆட்சி - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.!
Tamilnadu finally gets vidiyal Adchi bjp Annamalai tweet
தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் பொருட்களின் விலை கடந்த 4-ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டது. தயிர், நெய், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட தமிழக அரசின் ஆவின் பொருட்களின் விலை உயர்கிறது என்று ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, அரை லிட்டர் தயிர் ரூ.27ல் இருந்து ரூ.30ஆகவும், 1 லிட்டர் ஆவின் நெய் ரூ.515ல் இருந்து ரூ.535ஆகவும், 200 கிராம் பாதாம் பவுடர் ரூ.80ல் இருந்து ரூ.100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வுக்கு பால் முகவர்கள் சங்கம், அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து, விலை உயர்வை திரும்ப பெற வேண்டு என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, நெய் முதல் தயிர் வரை விலை உயர்ந்துவிட்டது. டாஸ்மாக்கில் குவார்ட்டர் பாட்டில் முதல் பீர் வரை விலை உயர்ந்துவிட்டது. வாக்குறுதியளித்தபடி இறுதியாக தமிழகத்தில் விடியல் ஆட்சி தொடங்கி விட்டது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
English Summary
Tamilnadu finally gets vidiyal Adchi bjp Annamalai tweet