ட்ரெண்டிங்கில் #HBDஎடப்பாடியார்...! முன்னாள் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து..!! - Seithipunal
Seithipunal


தமிழக முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமி கடந்த மே 12, 1954 அன்று பிறந்தார். தமிழகத்தின் 7 ஆவது முதலமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, தனது இளம் பருவத்தில் இருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பயணித்து வருகிறார். 

இவர் சேலம் மாவட்டம், எடப்பாடி நெடுங்குளம் என்ற சிற்றூரை அடுத்த சிலுவம்பாளையத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் கருப்ப கவுண்டர் மற்றும் தவசியம்மாள் ஆகியோர்கள் ஆவர். எடப்பாடி பழனிச்சாமி அரசியலுக்கு வருவதற்கு முன்பு வெல்ல வியாபாரம் செய்து வந்தார். எடப்பாடி பழனிசாமிக்கு ராதா என்ற மனைவி உள்ள நிலையில், இவர்களுக்கு மிதுன் என்னும் மகன் உள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உட்பட்ட நால்வருக்கு சிறை தண்டனை வழங்கி தீர்ப்புக்கூறிய நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் முதல்வராக பதவியேற்றார். அஇஅதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது, கடந்த மே 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக தோல்வியடைந்த பின்னர், பழனிசாமி எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்று, தமிழக சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், 2021 தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தவர் என்ற பெருமையையும் தக்க வைத்தார். இன்று தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் இன்றைய எதிர்க்கட்சி தலைவருக்கு பிறந்தநாள் ஆகும். 

இன்று ட்விட்டர் தளத்தில் அதிமுக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் #HBD_தலைவா, #EdappadiPalanisamy, #EPS, #HBDEPS ஆகிய ஹாஷ்டேக்குகளை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Former Cm Edappadi Palanisamy Birthday Today 12 May 2021 Twitter Trending


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->