அதிரப்போகும் தமிழகம்! நாளை நடக்கப்போகும் இரு பெரும் போராட்டங்கள்! - Seithipunal
Seithipunal


மீனவர்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து பாமக சார்பில் நாளை (8-ஆம் தேதி) இலங்கை தூதரகம் முற்றுகைப் போர் நடத்த உள்ளதாக, அக்கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்த அந்த அறிவிப்பில், "வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களின் மீதான சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலும், அடக்குமுறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பாரம்பரிய கடல் பகுதியில் தமிழக மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் வலியுறுத்தி வரும் போதிலும் அதை சிங்கள அரசு மதிக்க மறுப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இலங்கை சிறைகளில் வாடும் 162 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் விடுதலை செய்ய வேண்டும்; இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 192 படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று இலங்கை அரசையும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய, மாநில அரசுகளையும் வலியுறுத்தி நாளை செவ்வாய்க்கிழமை சென்னையில் பா.ம.க. சார்பில் இலங்கை துணைத்தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ம.க. இணைப் பொதுச் செயலாளருமான ஏ.கே.மூர்த்தி பா.ம.க. பொருளாளர் திலகபாமா ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து இணை மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்து கொள்வார்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள மீனவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்பார்கள்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் அதிமுக சார்பில் தமிழக அரசை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடக்க உள்ளது.

இதுகுறித்த அந்த அறிவிப்பில், "கடந்த 40 மாத காலமாக தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்குக் காரணமான திரு. ஸ்டாலினின் திமுக அரசைக் கண்டித்தும், மக்கள் நலன் கருதி உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், அஇஅதிமுக சார்பில் அனைத்து மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வட்டங்களிலும், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம். 

நாள் : 8.10.2024 - செவ்வாய் கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu PMK ADMK Protest Chennai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->