ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் செல்வதில் என்ன தவறு.? அமைதியான பேரணி தான் - தமிழிசை சௌந்தரராஜன்.! - Seithipunal
Seithipunal


காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்தினால் என்ன தவறு என தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த உள்ளனர். இதற்கு நீதிமன்ற உத்தரவின் படி தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,

பெட்ரோல் குண்டு வீசுவது தமிழர்களின் பண்பாடு கிடையாது என்றும் எந்த மாநிலங்களிலும் இந்த மாதிரியான சம்பவங்கள் நடக்கக்கூடாது. சமய சார்பற்ற யார் மீதும் பாரபட்சம் காட்டாத அமைதியான வாழ்க்கை தொடர வேண்டும் என கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், அனைத்து மதத்தினரும் சமம் என்று சொல்லும் போது ஒரு இயக்கத்திற்கு மட்டும் எப்படி தடை சொல்ல முடியும். ஆர்எஸ்எஸ் பேரணி எப்போதும் அமைதி பேரணி தான். ஆர்எஸ்எஸ் பேரணியை ஏன் தடை செய்ய வேண்டும். தேச உணர்வு உள்ளவர்கள் காந்தி ஜெயந்திஅன்று அமைதி பேரணி செய்வதில் என்ன தவறு? உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamizhisai speech about RSS rally


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->