சாதிய பாகுபாடு என்பது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் - ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.! - Seithipunal
Seithipunal


நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த தருணத்தில், பாகுபாடு என்பது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று, பாஞ்சாங்குளம் சம்பவத்தை குறிப்பிட்டு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் பேசியதாவது, 'கடைகளிலே குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுக்கமாட்டேன் என்று சொல்கிற அளவுக்கு பாகுபாடு இருப்பதை நாம் பார்க்கிறோம். இதெல்லாம் நடக்கக்கூடாது என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆக இது எவ்வகையில் முன்னிறுத்தப்படுகிறது என்று எனக்கு தெரியவில்லை. 

75 வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிற நேரத்தில் நிச்சயமாக நம்மால் எந்தவிதத்திலும் பாகுபாடை ஒப்புக் கொள்ளவே முடியாது.

பள்ளிகளிலும் சரி, கல்லூரிகளிலும் சரி, சமூகத்திலும் சரி, ஊரிலும் சரி, நாட்டிலும் சரி இந்த பாகுபாடு நிச்சயமாக இருக்கக்கூடாது. அந்த பாகுபாடு நிச்சயமாக களைந்து ஒழிக்கப்பட வேண்டியது. ஏன் இப்போது இத்தகைய நிகழ்வுகள் நடைபெறுகிறது என்று அதன் உள்ளே சென்று ஆராய வேண்டும்' என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamizhisai speech about tamilnadu school boy caste issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->