உச்சகட்ட பதற்றம்! ஆந்திராவில் நாளை பந்த்; தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு!
TDP bandh and govt restrictions imposed across AndhraPradesh
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த 2019 ஆம் ஆண்டு சிமென்ட்ஸ் நிறுவனத்துடன் ரூபாய் 317 கோடி அரசு ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததால் அவருக்கு 118 கோடி ரூபாய் லஞ்சமாக பெற்றதாக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த ஊழல் வழக்கில் நேற்று அதிகாலை அவரை ஆந்திர மாநில சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்து விஜயவாடாவுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட நிலையில் இன்று அவர் விஜயவாடா லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த விஜயவாடா லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றம் ஆந்திர மாநிலம் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதன் காரணமாக ஆந்திர மாநில முதல் முழுவதும் பதற்றத்தின் உச்சமாக தெலுங்கு தேச கட்சியைச் சேர்ந்தவர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நாளை ஆந்திர மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆந்திர மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மக்கள் பொது இடங்களில் கூடவும், பொது நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் அசாதாரண சூழல் நிலவி வருவதால் அசம்பாவிதங்களை தடுக்க மாநில முழுவதும் ஆந்திர மாநில காவல்துறை, மத்திய பாதுகாப்பு படை, அதிரடி படையினர் என அனைத்து போலீஸ் படைகளும் தயார் நிலையில் குவிக்கப்பட்டுள்ளது.
English Summary
TDP bandh and govt restrictions imposed across AndhraPradesh