ஓ.பி.எஸ் புதிய கட்சி தொடங்கியுள்ளார்... தளவாய் சுந்தரம் தந்த அப்டேட்..!! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனை காரணமாக பொதுக்குழு கூடி ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவிலிருந்து நீக்கியது. இதனைத் தொடர்ந்து பொதுக்குழுவிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த இரு நபர் அமர்வு அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 

இந்த மேல்முறையீட்டு வழக்கின் மீது அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிட போவதாக அறிவித்துள்ள நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற இரு தரப்பினரும் முனைப்பு காட்டி வருகின்றனர். இதனால் சின்னம் முடுக்கப்பட வாய்ப்புள்ளதாக பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் உச்சநீதிமன்றத்தை நாட திட்டமிட்டுள்ளனர்.

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது இந்திய தேர்தல் ஆணையம் முடிவு எடுக்காததால் இத்தகைய முடிவு எடுத்துள்ளதாக பழனிச்சாமி தரப்பினர் தெரிவித்துள்ளனர் 

இந்த நிலையில் இரு அணியினரும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தற்பொழுது புதிய கட்சி தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் "ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் அதிமுகவில் எவ்வாறு இருந்தது என்பது நாடே அறிந்த உண்மை. இதை நாங்கள் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் ஏற்கனவே அவரை கட்சியை விட்டு நீக்கி விட்டோம். ஓ.பன்னீர்செல்வம் புதிதாக கட்சி ஆரம்பித்திருக்கிறார். குழு போட்டு இருக்கிறார், தேர்தலில் சந்திப்போம்" என விமர்சித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thalavai Sundaram Criticised OPS has started a new party


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->