தஞ்சை தேர் விபத்து : மத்திய அரசு நிவாரண நிதி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தாஞ்சாவூர் மாவட்டம் களிமேடு அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் வருடம் தோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலில் 94 ஆவது ஆண்டு சித்திரைத் திருவிழா தேரோட்டம் நேற்று நள்ளிரவு தொடங்கி நடைபெற்று வந்தது.

அப்போது பூதலூர் சாலையில் களிமேடு என்ற பகுதியில் வந்து கொண்டிருந்த போது அங்குள்ள உயர் மின் கம்பி உரசியது. இதில் தேரில் மின்சாரம் பாய்ந்தது 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  தேர் திருவிழாவின் முதல் நாளிலே அசம்பாவிதம் நடைபெற்றதால் அந்த பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில், தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. தேர் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thanjavur chariot accident central govt relief fund announcement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->