தவறான தகவல் தொடர்பில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை..!
The Anti Corruption Branch has sent a notice to Arvind Kejriwal
70 இடங்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு, கடந்த 05-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்த டெல்லி தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. இதற்கு ஆம் ஆத்மி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
![](https://img.seithipunal.com/media/8-n3m2r.jpg)
இந்நிலையில், ஆம் ஆத்மி தலைவர் மற்றும் டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது; ஓட்டு எண்ணிக்கை தொடங்கும் முன்பே பாஜக தலைவர்கள் தில்லுமுல்லுவை தொடங்கிவிட்டனர். எங்கள் கட்சி வேட்பாளர்களை தொடர்பு கொண்டுபேரம் பேசி வருகிறார்கள்.
இன்று காலை வரை 16 ஆத்மி வேட்பாளர்களிடம் பேரம் பேசப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் தலா ரூ.15 கோடி தருவதாக ஆசை காட்டி உள்ளனர். ஆனால் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் யாரும் அதனை ஏற்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஆனால், இதற்கு பாஜக தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![](https://img.seithipunal.com/media/10-2ry32.jpg)
இவ்வாறு கெஜ்ரிவால் தவறான தகவல் வெளியிடுவதால், அவர் மீது வழக்கு தொடரப்படும் என்று பாஜக தெரிவித்தது. இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயன்றதாக குற்றம் சாட்டிய விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
குறித்த புகார் தொடர்பாக, அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த வேண்டும் என நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
English Summary
The Anti Corruption Branch has sent a notice to Arvind Kejriwal