தவெக கொடியில் யானைக்கு தடை கோரிய வழக்கு..? விஜய் பதில் தர நீதிமன்றம் உத்தரவு..!
The court has ordered Vijay to respond in the case seeking a ban on the elephant in the TVK flag
தமிழக வெற்றிக் கழக கொடியில் யானை சின்ன பயன்படுத்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்திருந்தது. விஜய்யின் தவெக-தின் கொடியில், சிவப்பு, மஞ்சள் என இரு வண்ணங்கள் உள்ளது. இந்த கொடியின் நடுவில் வாகை மலரும், 28 நட்சத்திரங்களும், மேலும் அதனை இரண்டு யானைகள் வணங்குவது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த கொடி அறிமுகப்படுத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே கொடியில் யானையை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. அதோடு இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதமும் எழுதியிருந்தது. அதாவது, தவெக கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம், பகுஜன் சமாஜ் கட்சிக்குச் சொந்தமானது எனவும், சட்டப்படி அதைப் பயன்படுத்த முடியாது எனவும் கூறப்பட்டிருந்தது.

அத்துடன், பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் சின்னமாக யானை உள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றை இதர கட்சிகள் பயன்படுத்த முடியாது எனவும் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆனந்தன் தெரிவித்து இருந்தார்.
அதுமட்டுமல்லாமல், “கடந்த 2003ம் ஆண்டு தேர்தல் ஆணையம் கொண்டுவந்த திருத்தத்தில், அசாம், சிக்கிம் தவிர வேறு எந்த மாநிலக் கட்சிகளோ, தேசியக் கட்சிகளோ, அங்கீகரிக்கப்படாத கட்சிகளோ யானை சின்னத்தை பயன்படுத்தக் கூடாது” என்று ஆனந்தன் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
“அரசியல் கட்சிகளின் கொடிகளுக்கும் அதில் இடம்பெற்றிருக்கும் உருவங்களுக்கும் ஒப்புதலோ, அங்கீகாரமோ கொடுப்பது தேர்தல் ஆணையம் இல்லை. சின்னங்கள், பெயர்கள் முறையற்ற பயன்பாடு தடுப்புச் சட்டம் 1950-க்கு உட்பட்ட வகையில் இருப்பது அரசியல் கட்சிகளின் பொறுப்பாகும். மேலும், கொடிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருப்பதை அந்தந்தக் கட்சிகள் உறுதிசெய்ய வேண்டும்” என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதனடிப்படிஅயில் தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த எந்த சிக்கலும் இல்லை என்று தகவல் வெளியான பின்பு, கடந்த வருடம் அக்டோபர் 27-ஆம் தேதி தவெக கொடியை கட்சியின் மாநாட்டில் விஜய் அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக கொடியில் யானை படத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் விஜய் பதில் தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 'இது தேர்தல் சின்னங்கள் விதிகளுக்கு முரணானது’ என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு பொதுச்செயலாளர் பெரியார் அன்பன் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே, ஏப்.29-க்குள் தவெக தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary
The court has ordered Vijay to respond in the case seeking a ban on the elephant in the TVK flag