இந்து மக்கள் கட்சியின் முக்கியப்புள்ளி அதிரடி கைது!...வெடித்தது போராட்டம்! - Seithipunal
Seithipunal


இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் ஓம்கார் பாலாஜியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூரில், ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்பிய விவகாரத்தில்,  தனியார் வார இதழை கண்டித்து இந்து மக்கள் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது. இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், அர்ஜுன் சம்பத்தின் மகனும், அக்கட்சியின் இளைஞர் அணி தலைவருமான ஓம்கார் பாலாஜி பங்கேற்று பேசினார்.

அப்போது, ஓம்கார் பாலாஜி மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து  பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கிரிமினல் குற்ற நோக்கத்துடன் செயல்படுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ், ஓம்கார் பாலாஜி மீது கோவை ரேஸ் கோர்ஸ் சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் ஓம்கார் பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The main point of the hindu people party was arrested he protest broke out


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->