அமைச்சர் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்!...வானில் வட்டமடித்ததால் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடிக்கு அமைச்சர் எ.வ.வேலு விமானம் மூலம் செல்ல முயன்ற நிலையில், மதுரையிலேயே விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது

சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 6 மணிக்கு அமைச்சர் எ.வ வேலு தூத்துக்குடி செல்ல திட்டமிருந்தார்.  அமைச்சர் புறப்பட்ட விமானத்தில் அமைச்ச்ர் உட்பட மொத்தம்  77 பயணிகள் பயணித்தனர். இன்று காலை விமானம் புறப்பட்டு சென்ற நிலையில், தூத்துக்குடி சென்றதும் அங்கு மோசமான வானிலை நிலவியது. இதன் காரணமாக அங்கு தரையிறக்க முடியாத காரணத்தினால், சில நிமிடங்கள் வானிலேயே விமானம் வட்டமடித்தது.

வானிலை தொடர்ந்து மோசமாகவே இருந்ததால் உடனடியாக மதுரைக்கு திருப்பி விடப்பட்டது. பின்னர் மதுரை விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட பயணிகள் அனைவரும் மதுரையிலேயே இறங்கினர்.

அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 77 பயணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும், நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ள நிலையில், அமைச்சர் எ.வ.வேலு கன்னியாகுமரிக்கு காரில் புறப்பட்டுச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The minister flight made an emergency landing circling in the sky is sensational


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->