புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கவில்லை- அதிர்ச்சி தகவல்!
The President was not invited to the opening ceremony of the new Parliament Shocking information
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடி, மக்களவை தலைவர் உள்ளிட்ட யாரும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கவில்லை என குடியரசு தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கடந்த மாதம் 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். அப்போது நாடாளுமன்றத்தை குடியரசு தலைவர் திறந்து வைப்பதே மரபு, ஆனால் அதை மத்திய அரசு மீறிவிட்டது என சர்ச்சை கிளம்பியது.
மேலும் நாடாளுமன்ற திறப்பு விழாவை காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், திமுக உள்பட 19 கட்சிகள் புறக்கணித்துவிட்டன. குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை இந்த விழாவிற்கு அழைக்கவே இல்லை என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டினர்.
ஆனால் குடியரசு தலைவர் நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு அழைக்கப்பட்டதாக பாஜகவினர் கூறிவந்தனர். இந்நிலையில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விழாவிற்கு திரௌபதி முர்முவிற்கு அதிகாரபூர்வ அழைப்பு எதுவும் விடுக்கப்படவில்லை என்பதை குடியரசு தலைவர் மாளிகை உறுதி செய்துள்ளது.
இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் குடியரசு தலைவர் மாளிகையிடம் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி, லோக்சபா சபாநாயகர் அல்லது வேறு ஏதேனும் அதிகாரியிடமிருந்து ஜனாதிபதிக்கு அழைப்பு வந்ததா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த குடியரசு மாளிகை, அப்படி எந்த அழைப்பும் வரவில்லை என்று பதிவளித்துள்ளது. இதனையடுத்து குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுத்ததாக பாஜகவினர் பொய் கூறி வந்தது ஏன் என்றும், நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவரை அழைக்காதது ஏன் என்றும் சாகேத் கோகலே கேள்வி எழுப்பியுள்ளார். இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
The President was not invited to the opening ceremony of the new Parliament Shocking information