பாரதியாருடைய வேகமும், பாரதிதாசனுடைய சொல்வளமும் தணிகைச்செல்வன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்! - Seithipunal
Seithipunal


முதுபெரும் கவிஞர் தணிகைச்செல்வன் அவர்களின் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கவிஞர் தணிகைச்செல்வன், தமது கவிதைகள் மூலம், தமிழர்களின் நெஞ்சில் என்றென்றும் நீங்காது நிலைத்திருப்பார்! என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முதுபெரும் கவிஞர் தணிகைச்செல்வன் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

அவரது கவிதைத் தொகுதியை 2001-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் வெளியிட்டு உரையாற்றிய போது. "பாரதியாருடைய வேகமும், பாரதிதாசனுடைய சொல்வளமும் கொண்டதுதான் தணிகைச்செல்வன் கவிதை என்று சொன்னால் அது மிகையாகாது”என்று பாராட்டினார்.

அத்தகைய பெருமையும், புகழும் பெற்ற கவிஞர் தணிகைச்செல்வனின் மறைவு தமிழ்கூறும் நல்லுலகிற்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர். நண்பர்கள். தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும். ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கவிஞர் தணிகைச்செல்வன், தமது கவிதைகள் மூலம், தமிழர்களின் நெஞ்சில் என்றென்றும் நீங்காது நிலைத்திருப்பார்! என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The speed of bharatiyar and the eloquence of bharathidasan thanikai selvan obituary of chief minister mk stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->