தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு! - Seithipunal
Seithipunal


மதுரையில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து பேசினார். அப்போது, சாமானியனும் நாட்டை ஆள முடியும் என்பதை நிகழ்த்தி காட்டியவர் அறிஞர் அண்ணா என்று குறிப்பிட்ட அவர், திமுக மீது மக்கள் கோபத்தில் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், அதிமுக ஆட்சியில் பள்ளிக்குழந்தைகளுக்கு  சீருடைகள், லேப்-டாப், தாலிக்கு தங்கம், அம்மா உணவகம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என்றும், திமுக ஆட்சியில் இதுபோன்று ஏதாவது ஒரு திட்டத்தை சொல்ல முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட சிறை சென்றுள்ளாக கூறிய அவர், உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க நினைப்பதற்கு, அவர் செய்த தியாகம் என்ன என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

எனவே தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், பொதுமக்கள் அதிமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The successor government in Tamil Nadu should be decided Former Minister Sellur Raju


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->