இண்டியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளரே இல்லை - அமித்ஷா விமர்சனம்!!
There is no Prime Ministerial candidate in the India alliance Amit Shah criticizes
மூன்றாம் கட்ட மக்களவை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. நேற்று அனைத்து கட்சி தலைவர்களும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர இறுதிகட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் அமித்ஷா பேசுகையில், ஆந்திராவில் ரவுடியிஸத்தை ஒழிக்கவே தெலுங்கு தேசம் கட்சியுடனும் ஜனசேனா கட்சியுடனும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. நாட்டை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்ற மோடியை மீண்டும் நாம் பிரதமர் ஆக்கவேண்டும்.
ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலத்தை சந்திர பாபு நாய்டு சிறப்பாக ஆட்சி செய்தார் . அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கினார். திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புனிதத்தை நாங்கள் காப்பாற்றுவோம். இண்டியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் அப்படி அந்த கூட்டணியில் யாரும் இருப்பதாக தெரியவில்லை என்று கூறினார்.
English Summary
There is no Prime Ministerial candidate in the India alliance Amit Shah criticizes