பாஜகவில் ஒரு முஸ்லிம் எம்.பி கூட இல்லாதது ஏன்? இதுதான் உங்கள் நியாயமா மோடி? - காங்கிரஸ் எம்.பி இம்ரான் பிராப் கர்ஹி - Seithipunal
Seithipunal


அரியானாவில் நேற்று பிரதமர் மோடி பேசும்போது, வக்பு திருத்த சட்டம் தொடங்க காங்கிரசை கடுமையாக விமர்சித்தார். இதில் முஸ்லிம்கள் மீது உண்மையான அனுதாபம் இருந்தால் அவர்களுக்கு 50 % தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்குங்கள் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.இதில் காங்கிரஸ் கட்சியின் மேல்சபை எம்.பி. இம்ரான் பிராப் கர்ஹி அவர்கள் கூறியதாவது,"பிரதமருக்கு இது போன்ற கருத்து பொருத்தமானதல்ல. நீங்கள் காங்கிரசை பார்த்து முஸ்லிம்கள் அனுதாபிகள் என்று சொல்கிறீர்கள்.

நீங்கள் அவர்களை வெறுக்கிறீர்களா? இல்லையென்றால் முக்தர் அப்பாஸ் நக்வி, ஷாவாஸ் உசேன், எம்.ஜே.அக்பர், ஜாபர் இஸ்லாம் ஆகியோரை குப்பை தொட்டியில் போட்டது ஏன்?வக்பு திருத்த சட்டம் மூலம் முஸ்லிம்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறீர்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால் பாராளுமன்ற மக்களவையில் அதைமுன்வைக்க உங்களிடம் ஒரு முஸ்லிம் எம்.பி. கூட இல்லை.

முஸ்லிம் பெண்களின் உரிமை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். மக்களவை அல்லது மேல்சபை, மாநில சட்டசபைகளில் உங்களிடம் ஒரு முஸ்லிம் பெண் உறுப்பினர் கூட இல்லை " என்று தெரிவித்தார்.

மேலும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஒருவர், "பாஜகவில் ஏன் தலித் முதல்வர் இல்லை" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சமாஜ்வாதிகட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அபுஆஸ்மி தெரிவித்ததாவது, "பாஜக தேர்தலில் போட்டியிட முஸ்லிம்களுக்கு டிக்கெட் கொடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அகில இந்தய மஜ்லீஸ் தலைவர் ஓவைசி, "ஆர்.எஸ்.எஸ். தனது சித்தாந்தத்தையும், வளங்களையும் நாட்டின் நலனுக்காக பயன்படுத்தி இருந்தால் பிரதமர் தனது குழந்தை பருவத்தில் தேனீர் விற்க வேண்டிய அவசியமில்லை. மோடியின் வக்பு திருத்த சட்டம் அவற்றை மேலும் பலவீனப்படுத்தும் " எனத் தெரிவித்துள்ளார்.இது தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

there not even single Muslim MP BJP Congress MP Imran birab Garhi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->