சமூக நல்லிணக்க பேரணியை அறிவித்த திருமா! ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை கேட்டு நீதிமன்றம் நாடினார்! - Seithipunal
Seithipunal


காந்தியை கொன்றது ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்த கோட்சே! காந்தியை கொன்றதற்கு இனிப்பு கொடுத்து கொண்டாடியது ஆர்எஸ்எஸ் இயக்கம்! 

இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் "வருகின்ற அக்டோபர் 2 தமிழகம் தழுவிய அளவில் அனைத்து ஒன்றியங்களிலும் வீசிக சார்பில் சமூக நல்லிணக்க பேரணியை நடத்த உள்ளோம். காந்தியடிகள் பிறந்த நாளன்று காந்தியடிகளை சுட்டுக் கொன்ற பாசிச சக்திகள் காந்தியடிகளின் பெருமையை ஓரங்கட்ட செய்யும் வகையில் அன்றைய தினம் பேரணி நடத்த உள்ளது" என பேட்டி அளித்துள்ளார். 

ஆனால் ஆர்எஸ்எஸ் உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் வழங்கப்பட்ட மனுவின் மீது முடிவு எட்டப்படாததால் நீதிமன்றம் சென்றனர். ஆர்எஸ்எஸ் தரப்பு வாதத்தில் "உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நாட்டில் உள்ள அனைவருக்கும் பேரணி நடத்த உரிமை உண்டு. அரசு மற்றும் காவல் துறை அப்பேரணியை நெறிமுறை படுத்த முடியுமே தவிர தடை விதிக்க முடியாது. எனவே நாங்கள் அளித்த மனுவின் மீது பரிசீலனை செய்து முடிவெடுக்க உத்தரவிட வேண்டும்" என்று வழக்கு தொடுத்தது. 

இதன் காரணமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவின் பெயரில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நெறிமுறைகள் நீதிமன்றத்தின் வாயிலாக வழங்கப்பட்டன. இதன்காரணமாக ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெறுவது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் இன்று விசிக தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் "ஆர்எஸ்எஸ் அமைப்பின் முந்தைய கால நடவடிக்கைகளை கருத்தில் கொள்ளாமல் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து பிரித்தாலும் கொள்கை கொண்ட ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையை கொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த கோட்சே காந்தியை கொன்றதற்கு இனிப்பு வழங்கி கொண்டாடியது இந்த அமைப்புதான். 

மேலும் காந்தியை கொன்ற ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு காந்தி ஜெயந்தி அன்று அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கக்கூடாது. விஜயதசமி பண்டிகைக்கு நம்பிக்கை இல்லாத அம்பேத்கரின் கொள்கைக்கு எதிராக இந்த பேரணி நடத்துவது அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவாளராக சித்தரிப்பதற்கு ஆர்எஸ்எஸ் முயற்சி செய்கிறது. நீதிமன்றம் நிபந்தனைகளை பின்பற்றாமல் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துவதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளது. 

தற்பொழுது பாஜக கட்சியின் மாவட்ட தலைவர்கள் விளம்பரத்திற்காக தங்கள் வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசி வரும் சூழ்நிலையில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால் மக்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும். எனவே காவல்துறை அனுமதி வழங்கக்கூடாது என்றும் பேரணிக்கு அனுமதி அளித்ததை திரும்ப பெற வேண்டும்" என மனு தாக்கல் செய்துள்ளார். 

போட்டி பேரணி நடத்த போவதாக அறிவித்த திருமாவளவன் இப்போது போட்டியாளரை நீக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruma announced the social harmony rally He sought a ban on the RSS rally


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->