திருமாவின் அதிமுக ஆதரவு நிலைப்பாடு; அடுத்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி..?
Thirumas stance in support of the Admk
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஒவ்வொரு பேட்டிகளில் ஒவ்வொரு கருத்தையும் கூறி வருகிறார்.
வி.சி., நடத்திய மது ஒழிப்பு மாநாட்டில் ஆரம்பித்த பிரச்னை இன்னும் முடியவில்லை. அந்த மாநாடு திமுக ஆட்சிக்கு மறைமுக எதிர்ப்பு மாநாடாகவே கருதப்பட்டது. திமுகவுக்குள் கண்டனங்கள் எழுந்ததும் பிரச்னையை பூசி மெழுகினார் திருமாவளவன்.
அதன்பின், வி.சி., கட்சியில் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜூனா திமுக ஆட்சில் பங்கு என அவர் கூற அதுவும் பெரியளவில் பேசப்பட்டது.
பிறகு திருமா அவர்கள் சில விஷயங்களை பட்டும் படாமல் பேட்டி அளித்துக்கொண்டு இருக்கிறார். அதிமுக கூட்டணியிலும் அவருக்கு ஒரு கண் விருப்பதாகவும், அங்கும் ஒரு துண்டை போட்டு வைக்கிறார் திருமா என்ற விமர்சனமும் எழுந்தது.
தற்போது, ‛‛அதிமுகவின் வீழ்ச்சி பா.ஜ.,வுக்கு இடம் தந்து விடும்'' என்று சொல்லி, அதிமுகவுக்காக பேசியுள்ளார்.
இது அப்பட்டமான அதிமுக ஆதரவு நிலைப்பாடு என்று சிறு எல்லோருக்கும் தெரியும் என கூறப்படுகிறது. ‛‛திராவிட கட்சிகளுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன்'' என்று அவர் சொல்வது அதிமுகவையும் சேர்த்து தான் என்பதால், தேவைப்பட்டால் அணி மாறலாம் என்பதையே சொல்லாமல் சொல்கிறார் திருமா என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். அரசியல் விமசகர்கள் கூறுகிறார்கள்.
அடுத்த சட்டமன்ற தேர்தலின் போது கூட்டணி கணக்குகள் மாறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன என்ற கருத்து, திருமாவின் சமீபத்திய பேட்டி மூலம் வலுவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Thirumas stance in support of the Admk