ஹர்திக் பாண்டியாவின் அதிரடி வீண்..! குர்னால் பாண்டியா அபாரம்..! மும்பை அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி..!
Bengaluru team defeated Mumbai team and won
ஐபிஎல் தொடரின் 20-வது லீக் போட்டி மும்பை-பெங்களூரு அணிகளுக்கு இடையில், வான்கடே மைதானத்தில் இடம்பெற்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணியின் சார்பாக, வீரர்களாக விராட் கோலி 47 பந்துகளில் 67 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். படிகல் 37 ரன்களிலும், கேப்டன் படிதார் 64 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார். அவரோடு ஜித்தேஷ் சர்மா 40 ரன்களை எடுத்தார்.
இறுதியில், பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 221 ரன்களை எடுத்து இருந்தது.

222 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 17 ரங்களில் ஆட்டமிழந்தார். அணியின் அதிகபட்சமாகி திலக் வர்மா 29 பந்துகளில் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். அணியின் கேப்டன் 15 பந்துகளில் 42 ஆட்டமிழந்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது. பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக குர்ணால் பாண்ட்யா 04 விக்கெட்டுகளும், யாஸ் தயாள், ஹசில் வுட் ஆகியோர் தலா 02 விக்கெட்டுகளும், புவனேஸ்வர் குமார் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்படி பெங்களூரு அணி ஐ.பி.எல். 2025 தொடரில் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
English Summary
Bengaluru team defeated Mumbai team and won