இது முடிவல்ல..ஆரம்பம் - விஜய பிரபாகரன்!! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த 18-வது மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில்  விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் 4379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது முடிவல்ல தொடக்கம் என்று பதிவிட்டுள்ள பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்கு பதிவு, ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்கு பதிவு, மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல்   மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டம் மக்களவைத் தேர்தல் மே 13ஆம் தேதியும், ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தல் மே 20 ஆம் தேதியும், ஆறாம் கட்டும் மக்களவைத் தேர்தல் மே 25ஆம் தேதியும், கடைசி கட்ட ஏழாம் கட்ட மக்களவை தேர்தல் ஜூன் மூன்றாம் தேதியும் நடைபெற்ற முடிந்தது.

அதனைத் தொடர்ந்து நேற்று மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியான நிலையில், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் நம்பிக்கை நட்சத்திரம் விஜயபிரபாகரன் திமுக வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் 4379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் காலை முதலே முன்னிலை வகித்து வந்த விஜய பிரபாகரன், ஐந்தாவது சுற்றுக்கு பிறகு சிறிய அளவிலான எண்ணிக்கையில் தொடர் பின்னடைவை சந்தித்து வந்தார். மாணிக்கம் தாகூரும் தொடர்ந்து மாறி மாறி முன்னிலை வகித்து வந்த நிலையில் இறுதியில் விஜய பிரபாகரன் திமுக வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் தோல்வியை தழுவினார்.

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் நடிகர் ராதிகா சரத்குமார் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தொகுதியில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் 3,80,877 வாக்குகளைப் பெற்றார். தோல்வியை தழுவிய நிலையில், விஜய பிரபாகரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது முடிவல்ல; தொடக்கம் என்ன பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

This is not the end the beginning Vijaya Prabhakaran


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->