உனக்கு என்ன மரியாதை டேஷ் கொடுக்கணும்? திமுக பேரூராட்சி தலைவிக்கு சாதி ரீதியிலான கொடுமை, கொலை மிரட்டல் விடுத்த கவுன்சிலர் புருஷன்கள்! - Seithipunal
Seithipunal


திமுக ஆட்சியில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த அவர்கள் கட்சியையே சேர்ந்த அம்பாசமுத்திரம் மணிமுத்தாறு சிறப்புநிலைப் பேரூராட்சி தலைவிக்கு சாதி ரீதியிலான கொடுமைகள் நடந்துள்ளது.

இதுகுறித்து அவர் நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு கொடுத்துள்ள புகார் மனுவில், "நான் இந்து- பட்டியல் சமூகத்தை சார்ந்தவள். மாஞ்சோலையில் ஐந்து தலைமுறையாக தேயிலை தோட்ட கூலி தொழிலாளர்களாக வாழ்ந்து வந்த ஒடுக்கப்பட்ட, ஏழை எளிய குடும்பத்தைச் சார்ந்த எனக்கு தமிழகத்தின் முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களாலும், மக்களாலும் மாஞ்சோலை பகுதியில் கூலி வேலை பார்த்து வந்த இடத்திலேயே 10-வது வார்டில் தி.மு.க வார்டு உறுப்பினராக தேர்தலில் போட்டியிட வைத்து மணிமுத்தாறு பேரூராட்சி தலைவியாக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

பட்டியல் சமூகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பேரூராட்சியில், நான் பேரூராட்சி தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆதிக்க சாதி வார்டு உறுப்பினர்களின் உறவினர்களாலும் கணவன்மார்களாலும் கடுமையான சாதிய ஒடுக்குமுறைகளுக்கும், மிரட்டலுக்கும் உள்ளாகி மக்கள் பணி செய்ய முடியாமல் நெருக்கடியிலும், பெரும் துயரத்திலும் வாழ்ந்து வருகிறேன்.

மணிமுத்தாறு பேரூராட்சி
1)ஆலடியூர் 4-வது வார்டு உறுப்பினர் திருமதி. செல்வி அவர்களின் கணவர், திரு .மாரியப்பன் (இந்து -மறவர்),
2) கீழ ஏர்மாள்புரம் 7-வது வார்டு உறுப்பினர் திருமதி. பிரேமாவின் கணவர் திரு .காசி (இந்து மறவர்),
3)கீழ ஏர்மாள்புரம் 5-வது வார்டு உறுப்பினர் திருமதி. முப்புடாதியின் மாமனார் திருபூதப்பாண்டியன் (எ). சட்டநாதன் (இந்து மறவர்)
மேற்கண்ட வார்டு உறுப்பினர்களின் உறவினர்களும், கணவன்மார்களும், பேரூராட்சி கூட்டங்களில் சட்டத்திற்கு புறம்பாக பங்கேற்று எனக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

பெரும்பாலான பேரூராட்சி கூட்டங்களில் மேற்குறிப்பிட்ட பெண் வார்டு உறுப்பினர்களுக்கு பதில் அவர்களது கணவன்மார்கள் பங்கேற்கின்றனர் பெரும்பாலும் பேரூராட்சி கூட்டங்களுக்கு மது அருந்திவிட்டு போதையில் வருகின்றனர். இது தொடர்பாக நான் கேட்டாலும், சாதிய ரீதியாக கடுமையான சொற்களால் திட்டியும், மிரட்டியும், பொது இடத்தில் என் மீது அவதூறு பரப்புவதுமாக செயல்பட்டு வந்தனர்.

இந்நிலையில் பேரூராட்சியின் சார்பில் கடந்த கூட்டம் கூட்டப்பட்டு இருந்தது.கூட்டத்தில் யாரும் பங்கேற்கவில்லை. அடுத்த நாள் 12.11.2024 அன்று காலை சுமார் 11.30 மணியளவில், பேரூராட்சி அலுவலகத்தை விட்டு நான் வெளியே வந்த போது, எனக்கு எதிரே வந்த திரு காசி, மற்றும் திரு மாரியப்பன் ஆகிய இருவரும் மது குடித்துவிட்டு, என்னை பெண் என்றும் பாராமல் பொது இடத்தில் வழி மறித்து மரியாதை குறைவாக ஒருமையில், "ஏய் முண்ட ஒழுங்கா பதவி வேண்டாம் என்று எழுதி கொடுத்துட்டு ஓடிவிடு **** இல்லனா உடம்பு சரியில்லை என்று எழுதி கொடுத்துட்டு ஊரை விட்டு ஓடி விடு என்று மிரட்டினார்கள்.

உடனடியாக நான், அவர்களைப் "பார்த்து மரியாதையாக பேசுங்கள்" என்று சொன்னபோது உனக்கு என்ன மரியாதை **** கொடுக்கணும், உன் சாதிக்காரன் என் வீட்டில் வேலை பார்க்கிறான், உனக்கு என்ன மயிருக்கு மரியாதை கொடுக்கணும், என்று சாதிய ரீதியாக மிரட்டல் விடுத்தனர்.

அதன்பின் அவர்கள் "காண்ட்ராக்டை நாங்கள் சொல்கிற ஆளுக்கு தான் கொடுக்கணும், நாங்க சொல்றபடி தான் வேலை நடக்கணும், இல்லன்னா போர்டை நடக்க விடமாட்டோம், உன்னால் எங்க பேச்சைக் கேட்டு முடியலைன்னா எழுதி கொடுத்துட்டு ஊரைவிட்டு ஓடிவிடு,போகல என்றால் உன்னை கொன்று விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்தனர்.

தொடர்ந்து இதுபோன்று என்னை சாதிய ரீதியாக அவதூறு பரப்புவதும்,கொலை மிரட்டலும் விடுத்து வரும் மேற்கண்ட வார்டு உறுப்பினர்களின் கணவர்களான மாரியப்பன், காசி மற்றும் மாமனார் சட்டநாதன் ஆகியோரால் எனது உயிருக்கு ஏதேனும் பாதிப்பு நடைபெறுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

எனவே எனது உயிருக்கு அச்சம் ஏற்படுத்தும் நோக்கில் பெண் என்றும் பாராமல், பொது இடத்தில் கெட்ட வார்த்தையில் திட்டி,கொலை மிரட்டல் விடுத்த மேற்குறிப்பிட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து என் உயிரை காப்பாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli Devendra Kula Vellalar DMK Caste crime


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->