திருப்பதி லட்டு விவகாரம் : தேசிய அளவில் சனாதன வாரியம் அமைக்க பவன் கல்யாண் வேண்டுகோள்! - Seithipunal
Seithipunal


ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நாம் அனைவரும் திருப்பதி பாலாஜி பிரசாத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பது கண்டுஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம் என்றும், இதற்கிடையே  ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப்பட்ட திருப்பதி தேவஸ்தான வாரியம் பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று சாடியுள்ளார்.

மேலும், இது கோவில்களை இழிவுபடுத்துதல் மற்றும் பிற தர்ம நடைமுறைகளைச் சுற்றியுள்ள பல சிக்கல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக குறிப்பிட்டுள்ள அவர், நாடு முழுவதும் உள்ள கோயில்களில் இதுபோன்ற பிரச்சினைகளை ஆய்வு செய்ய, தேசிய அளவில் 'சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்' அமைக்கும் நேரம் வந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

நீதித்துறை, குடிமக்கள்,கொள்கை வகுப்பாளர்கள், மதத் தலைவர்கள்,  ஊடகங்கள் மற்றும் பல களங்களில் உள்ள அனைவராலும் தேசிய அளவில் ஒரு விவாதம் நடக்க வேண்டும் என்றும், சனாதன தர்மத்தை எந்த வகையிலும் இழிவுபடுத்துவதற்கு முடிவு கட்ட நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupati laddu issue Pawan Kalyan request to set up Sanatana Board at national level


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->