எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தது ஏன்.? த.மா.கா யுவராஜா விளக்கம்.!!
TMC yuvaraja explain about met Aiadmk EPS
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலை சந்திக்க உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பின்போது அறிவித்திருந்தார். இந்த பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் யுவராஜா சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் அவரை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த ஆலோசனையின் முடிவில் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்து காரில் புறப்பட்டுச் சென்ற யுவராஜா தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தமிழ் மாநில காங்கிரஸ் அதிமுக கூட்டணியோடு இணைந்து பல தேர்தல்கள் மற்றும் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு பிரச்சனைகளுக்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்தோம் அதற்கு மேலாக நல்ல நட்போடு அரசியல் பணியாற்றி வந்தோம்.
தலைவர் திரு ஜி.கே வாசன் அவர்கள் பாஜகவுடன் கூட்டணி என்று பத்திரிகையாளர்களை சந்தித்து அறிவித்துள்ளார்கள் பெருந்தலைவர் காமராஜர் மக்கள் தலைவர் மூப்பனார் இவர்களின் வழியில் அரசியல் பயின்றவன் என்ற காரணத்தினால் நான் மற்றும் எனது குடும்பத்தினர் சார்பாக தனிப்பட்ட முறையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வந்துள்ளேன் என தனது அறிக்கையின் மூலம் விளக்கம் அளித்துள்ளார்
English Summary
TMC yuvaraja explain about met Aiadmk EPS