வீடியோ எடுத்த ஆளுநரின் விருந்தினர் - அப்பாவு பிறப்பித்த உத்தரவு!
TN Assembly TRP Raja Complaint
தமிழக சட்டப்பேரவையில் அவை உரிமை மீறல் பிரச்சனை குறித்து, மன்னார்குடி சட்டமன்ற தொகுதியின் திமுக எம்.எல்.ஏ., டிஆர்பி ராஜா அவை தலைவரிடம் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
கடந்த ஒன்பதாம் தேதி சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றும் போது, பேரவை தலைவர் இருக்கையில் எதிரே உள்ள பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த ஆளுநரின் விருந்தினர்களில் ஒருவர், பேரவை நடவடிக்கைகளை தனது கைபேசியில் வீடியோ பதிவு செய்துள்ளதாக டிஆர்பி ராஜா அவை தலைவரிடம் முறையிட்டுள்ளார்.
மேலும் இதனைப் பார்த்த டிஆர்பி ராஜா உடனடியாக பேரவை காவலரிடம் தெரிவித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் பேரவையின் தெரிவித்துள்ளார்.
மேலும் சட்டப்பேரவையில் பார்வையாளர்கள் கைபேசி பயன்படுத்தக்கூடாது என்ற விதி இருப்பதால், இதனை உரிமைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று, அவை தலைவருக்கு டிஆர்பி ராஜா கோரிக்கையாக வைத்தார்.
இதனை அடுத்து பேசிய சட்டப்பேரவை தலைவர் அப்பாவய, மேலோட்டமாக பார்க்கும்போது இதில் உரிமை மீறல் இருப்பதாகவே தெரிகிறது. எனவே இந்த விவகாரத்தில் ஆழ்ந்த ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சட்டப்பேரவை உரிமை குழுவுக்கு அனுப்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
TN Assembly TRP Raja Complaint