மீனவர்கள் விவகாரத்தில் தலையிடக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம்..!!
TN BJP Leader Annamalai Write a Letter To External Affair Minister Jai Sankar in TN Fishermen Issue
கச்சத்தீவு அருகே இலங்கை ரோந்துப் படகு தமிழக மீனவர்களின் மீன்பிடி படகு மீது மோதியதில் படகில் இருந்த 4 மீனவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 2 பேர் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் மாயமாகியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "நேற்று மொத்தம் 359 மீன்பிடி படகுகளில் அனுமதிச் சீட்டு பெற்று தமிழக மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் நெடுந்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரது ரோந்துப் படகு தமிழக மீனவர்களின் மீன்பிடி படகில் மோதியுள்ளது. இதில் படகில் இருந்த மீனவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவரை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ள நிலையில், ஒருவர் மாயமாகி உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
சமீப காலமாக இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களைக் கைது செய்து தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்துள்ள மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம், இதில் உங்கள் தலையீடு அவரசமாகத் தேவை என்பதை குறிக்கிறது.
எனவே காணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடிக்கவும், கைது செய்யப் பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் இதில் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் கேட்டுக் கொள்கிறோம்" என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
TN BJP Leader Annamalai Write a Letter To External Affair Minister Jai Sankar in TN Fishermen Issue